பர்கூர் இன மாட்டின் இயல்புகளை பற்றி கூறுக? Other Animal Care,
கால்நடை சம்பந்தப்பட்ட கேள்வி - பதில்கள்..!
பர்கூர் இன மாட்டின் இயல்புகளை பற்றி கூறுக?
Tell us about the nature of the Barkur breed of cow?
Mr Animal Care :
பர்கூர் இன மாட்டின் இயல்புகளை பற்றி கூறுக?
◆ ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா பர்கூர் குன்றுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற இனம் தான் இது.
◆ பழுப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளும், திட்டுகளும் கொண்ட உடலமைப்பைக் கொண்டிருக்கிறது. உழுவதற்கும், வண்டி இழுப்பதற்கும் ஏற்ற திடமான இனம்.
கன்றுகளுக்கான அடர்தீவனம் தயாரிப்பது எப்படி?
◆ மக்காச்சோளம் 42 கிலோ, கடலைப் புண்ணாக்கு 35 கிலோ, கோதுமைத் தவிடு அல்லது அரிசித் தவிடு 10 கிலோ, மீன் தூள் 10 கிலோ, தாது உப்புக் கலவை 2 கிலோ, உப்பு 1 கிலோ ஆகியவற்றை அரைத்து கன்றுகளுக்கு அடர்தீவனம் தயாரிக்கலாம்.
◆ கன்றுகளுக்கு ஒரு நாளைக்கு 1-1.5 கிலோ (மற்ற தீவனத்தை உண்ணும் வரை) கொடுக்க வேண்டும். பிறகு, அவைகளுக்கு அளிக்கப்படும் அடர்தீவனத்தின் அளவை கட்டுப்படுத்தலாம்.
மாட்டிற்கு கோபுரச் சுழி என்பது எங்கு, எவ்வாறு இருக்கும்?
◆ மாடுகளின் திமிலின் மேலும், திமிலுக்கு முன்புறத்திலும் (திமிலின் முன்புறம் எதிரே நின்று பார்த்தால் தெரியும்) அல்லது திமிலும், முதுகும் சேருமிடத்தில் இருப்பது கோபுரச் சுழியாகும்.
◆ இதை ராஜசுழி என்றும் கூறுவர். இச்சுழி உள்ள மாடுகளை வளர்ப்போர் மிகுந்த செல்வத்துடன் வாழ்வர் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.
பசு அம்மை நோயை எவ்வாறு கண்டறிவது?
◆ பசு அம்மை நோய் என்பது எளிதில் பரவும் தொற்று நோய் ஆகும்.
◆ இதனால் காய்ச்சல் ஏற்படும், மடியிலும், காம்புகளிலும் முதலில் நுண்ணிய சிவப்பு புள்ளிகள் தோன்றி விரைவில் அவை கொப்புளங்களாக மாறிவிடும். கவனிக்காவிட்டால் அவை நாளடைவில் புண்களாக மாறிவிடும்.
சினை மாட்டிற்கு ஏன் அதிகமாக பசுந்தீவனம் அளிக்க வேண்டும்?
◆ சினை மாட்டிற்கு அதிகமான அளவு பசுந்தீவனம் அளித்தால் பிறக்கும் கன்றுகளில் குருட்டுத் தன்மையை தடுப்பதுடன், கன்று ஈன்றவுடன் நஞ்சுக்கொடி மாட்டின் கருப்பையிலிருந்து விழாமல் இருப்பதையும் தடுக்கலாம்.
Comments
Post a Comment